Chaap Tilak Sab Cheeni – அமிர் குஸ்ரோவ்

என்னிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாய், ஒரே பார்வையால்
காதல் மதுவை பருக்கக் கொடுத்தாய்
என்னை மயக்கிவிட்டாய், ஒரே பார்வையால்
என் அழகான மிருதுவான கைகளில் பச்சை வளையல்கள்
கைகளை நீ இறுக்கமாக பற்றிக்கொண்டாய், ஒரே பார்வையால்
என் வாழ்க்கையை உனக்கு அற்பணிக்கிறேன்
உன்னையே என்னுள் வண்ணமாக பூசிவிடு, ஒரே பார்வையால்
என் வாழ்க்கையை முற்றுமாக உனக்கு அற்பணிக்கிறேன்
நீ என்னை மணந்து கொண்டாய், ஒரே பார்வையால்
என்னிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாய், ஒரே பார்வையால்

– அமிர் குஸ்ரோவ்
தமிழ் மொழிபெயர்ப்பு – சபா முத்துகுமார்

இந்த சூஃபிக் கவிஞ்னைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Continue reading “Chaap Tilak Sab Cheeni – அமிர் குஸ்ரோவ்”

Advertisements