வ.உ.சி நகர் தெருக்களில் இருந்து (1)

மழைக் காலத்தில் நனைந்த வேர் போல அந்த நகரம் இன்னமும் ஈரம் காயவைக்கப்படாமலே இருக்கிறது. என்னை எப்போதும் அதில் நனைந்தபடியே பார்க்க விரும்புகிறேன்.அங்கு நான் வெறும் சிறுவன்.கவலைகளற்றவன்.பெரும் காகிதங்களில் பிரபஞ்சம் வரைந்துகொண்டிருன்தேன்.அங்கு உழன்று கொண்டிருக்கும் என்னை எப்போதும் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன் .அதன் தெருக்களில் ஓடிக்கொன்றுப்பேன். என் இரவுகளில் பாதி அந்தக் கனவுகள் கண்டே உறங்கி இருக்கிறேன்.என் வாழ்வின் மிக நீளமான நினைவாக எஞ்சி இருப்பது அந்த நகரம் மட்டுமே.அந்த நகரத்தின் அனைத்தையும் என்னால் மிகத் துல்லியமாக பார்த்துவிட முடியும். அது கொண்டாட்டமான நகரம். தினமும் அதில் நான் வண்ணங்களை நிரப்பிக் கொண்டிருப்பேன். இன்றும் அங்கு திரியும் நான் விசித்திரமானவன். தினமும் பள்ளி மைதானங்களில், கோவில் தெருக்களில், சைக்கிள் கடைகளில், ஹிந்தி கற்றுக்கொண்டும் Continue reading “வ.உ.சி நகர் தெருக்களில் இருந்து (1)”

Advertisements

கோவா என்றொரு நகரம்

ஒவ்வொரு நண்பனிடமும் உனக்கான பாதை இருக்கும், ஒவ்வொரு பாதையிலும் உனக்கான நண்பன் இருப்பான். பயணித்துக் கொண்டே இரு

கோவா என்று முடிவாகிவிட்டது. எனக்கு சற்றும் நம்பிக்கையே இல்லை. இதற்குமுன் இப்படி பல முறை கோவாவிற்கான திட்டங்கள் செய்து, அது எல்லாமும் அப்படியே நவீன் வீட்டு வாசலிலே புதைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் எங்கள் இப்படியான எல்லா திட்டங்களும் நவீன் வீட்டு வாசலில் நின்று வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆரம்பமாகும். அப்படியாக பல முறை கல்லூரி நாட்களில் கோவாவிற்கான திட்டங்கள் ஜரூராக நடைபெற்றது உண்டு. எல்லாம் திட்டங்களாகவே கிடக்கும். இப்பொழுது அனைவரும் Continue reading “கோவா என்றொரு நகரம்”