இந்தியாவின் மகள் – சமூகத்திற்கு சொல்லும் செய்தி

கடந்த 2௦12 தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தின் ஆவணப்படம் தான் இந்தியாவின் மகள் (India’s Daughter). இப்படம் இந்தியாவின் கலாச்சாரம் எனக் கட்டமைக்கப் பட்ட ஆணாதிக்கச் சமூகத்தையும், சமநிலையற்ற இந்தியாவின் வளர்ச்சியையும் விவாதத்திற்குள் எடுத்துச் செல்கிறது. இன்றைய அரசாங்கம் இது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என படத்திற்கு தடை விதித்திருக்கிறது. அத்தடைகளையும் மீறி பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு,

Continue reading “இந்தியாவின் மகள் – சமூகத்திற்கு சொல்லும் செய்தி”

Advertisements

இந்தியாவும் பாகிஸ்தானும்… கோப்பையும் காஷ்மீரும்…

இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பை கிரிகெட் போட்டி. இதை இரு நாட்டிற்கும் இடையேயான மிகப் பெரிய போர் என்றதொரு நிலையை மக்கள் கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த இந்தியாவும் காலையிலே தொலைகாட்சி முன் அமர்ந்து விட்டது. சமூக வலைதளங்கள் முழுவதிலும் மக்களின் மன ஓட்டம் பிரதிபலித்தன. பெரும்பாலும் அது மட்டமானதாகவும், பிறழ்வு கொண்டதாகவும் இருந்தது. பாகிஸ்தானையும், அந்த நாட்டு மக்களையும் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். சமூக வலைதளத்தில் எங்கும் பாகிஸ்தானியர்கள் மிக மோசமாக  பகடி செய்யப்பட்டார்கள். சாலையில், போக்குவரத்து விதிகளைக் கூட மதிக்காமல் செல்கிற, அப்படியே எவனோ ஒருவன் மதித்து நின்றால் கூட ஹாரன் அடித்தே அவனை பைத்தியமாக்கும் சமூகத்திடம் இருந்து Continue reading “இந்தியாவும் பாகிஸ்தானும்… கோப்பையும் காஷ்மீரும்…”