பரிசளிக்கப்பட்ட மழைக்காலம்

பெரும் மழைக் காலம் ஒன்றை பரிசளித்தாள்
அதில் என்நேரமும் மழை
நனைதலில் இருந்து தப்பவே முடியாத மழை
அதில் நனைந்து திரிவதற்கு
அவனிடம் எந்தக் காரணங்களும் இல்லை
மிக இறுக்கமாக
தன்னையே தனக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டான்
இத்தனை பரிசுத்தமான மழை
தனக்கானதில்லை என்று
அடியாழத்தில் இருந்து நம்பத்துவங்கினான்
கண்களை மூடி
இந்தக் கடும் மழையை
தன்னால் தாங்க முடியாதென்று
கடவுளிடம் வேண்டினான்

Continue reading “பரிசளிக்கப்பட்ட மழைக்காலம்”

Advertisements

வெய்யிலை உருமாற்றும் காக்கைகள்

வீட்டின்
ஒவ்வொரு படிக்கட்டுகளாக
இறங்கி வழிந்துகொண்டிருந்த
வெய்யிலை
பருகிவிட்டுச் சென்ற
காக்கைகள்
மீண்டும் மழையாக
சில சமயங்களில்
குளிராக
சில சமயங்களில் Continue reading “வெய்யிலை உருமாற்றும் காக்கைகள்”

நனைந்து திரிவது

அன்று ஒரு நாள்
முகம் பார்த்து பேசிக்கொள்வதற்காக
இத்தனை வருட சோகத்தை
நீரோடு நீராக அழுது
கரைத்து விடுவதற்காக
முடிவற்ற கலவி ஒன்றிற்காக
காகிதக் கப்பலேறி
திசைகளற்ற நாடுகள் செல்வதற்காக
என்னை உற்று நோக்கும்
குளிருடன் உரையாடுவதற்காக
தற்கொலை ஒன்றை தடுப்பதற்காக Continue reading “நனைந்து திரிவது”

Chaap Tilak Sab Cheeni – அமிர் குஸ்ரோவ்

ஒரே பார்வையால் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாய்
காதல் மதுவை பருக்கக் கொடுத்தாய்
ஒரே பார்வையால் என்னை மயக்கிவிட்டாய்
என் அழகான மிருதுவான கைகளில் பச்சை வளையல்கள்
ஒரே பார்வையால் கைகளை நீ இறுக்கமாக பற்றிக்கொண்டாய்,
என் வாழ்க்கையை உனக்கு அற்பணிக்கிறேன்
ஒரே பார்வையால் உன்னையே என்னுள் வண்ணமாக பூசிவிடு
என் வாழ்க்கையை முற்றுமாக உனக்கு அற்பணிக்கிறேன்
ஒரே பார்வையால் நீ என்னை மணந்து கொண்டாய்
என்னிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாய், ஒரே பார்வையால்

– அமிர் குஸ்ரோவ்
தமிழ் மொழிபெயர்ப்பு – சபா முத்துகுமார்

இந்த சூஃபிக் கவிஞ்னைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Continue reading “Chaap Tilak Sab Cheeni – அமிர் குஸ்ரோவ்”

கண்ணாடிப் போத்தல்களுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் காதல்

[இப்பதிவு லகுடபாண்டியனை பிரிந்து சென்ற பெருங்காதலிக்குச் சமர்ப்பணம்]

துருக்கி கடற்கரையில்
மது அருந்திக் கொண்டிருந்த பொழுது
உன் பிரிவின் முதல் நினைவு வந்தது
மதுவின் கடைசி துளியில்
அது பல சொற்களாக
அழுகையாக
கசப்பாக உருப்பெற்றது
அதை முழுவதுமாக
காகிதங்களில் நிரப்பி வைத்தேன்
என்னால் வேறு எப்படியுமாக

Continue reading “கண்ணாடிப் போத்தல்களுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் காதல்”

மயில்களிடம் இருந்து வரும் வாசனை

எத்தனை முறை என் வலது கையை முகர்ந்து பார்த்தும்
அப்படியே தான் இருந்து அந்த வாசனை
அப்பாவிடம்
நண்பனிடம்
கண்ணம்மாவிடம்
எல்லோரிடமும் சொல்லியாகி விட்டது
யாரும் நம்புவதாக இல்லை
பெருங்காதலின் காமம் போல
என்னுள்ளே கிடந்தது
ஒவ்வொரு முகர்தளிலும்
முதல் முறை பார்த்தது போலவே
வேலிகளுக்கு அப்பால் தோகையை விரித்தபடி
மழைக்காக காத்து நின்ற அந்த மயிலின் வாசனை

நீந்திக் கொண்டிரு

நீந்திக் கொண்டே இரு
நினைவுகளில்
அன்பில்
கனவுகளில்
காதலில்
காதல் தரும் வலியில்
பிரபஞ்ச வெளியில்
இப்படி எதிலாவது.
நீந்துதல் ஒரு கொண்டாட்டம்