சாத்தானுக்கு அருகில் ஒரு இடம்

கருமை, அழுத்தம், வெறுப்பு, கோபம், அகோரம், காமம், வன்புணர்ச்சி, குரூரம், இரத்தம், சதை, பிணம், பிணத்தின் வாடை, அழிவு, கீழ்மை, சிறுமை, சாவு…

கடவுளுக்கு அருகில் இடம் வேண்டாம்
சாத்தானிடம் இருந்து தப்பித்துக் கொள்ள
அதனுக்கு அருகிலே ஒரு இடம் வேண்டும்
சாத்தானுக்கு அருகில் ஒரு இடம் கொடுங்கள்.

இந்த இசை வகை தான் அதற்கான் வழி. இசையை கேளுங்கள் உங்களுடைய எல்லா சிறுமைகளும் கிழமைகளும் உங்களை சாத்தானுக்கு அருகில் இட்டுச்செல்லும். #BlackMetal

Advertisements

தம்மு குட்டுக்கு… தம்மு குட்டுக்கு…

Everytime I think of you God, my heart flutters


இது மேலே இருக்கும் தலைப்பின் பொருள். ‘அலிப் அல்லா ‘ என்ற சூபி பாடலில் வரும் வரிகள் இவை. சூபிசம் (sufism) என்னும் இஸ்லாமின்  மத வழிபாட்டின் தழுவலாக வந்தவை தான் இந்த சூபி இசை. இஸ்லாமில் இசை வழிபாடு என்பது கிடையாது தான். இந்தியாவில் முகலாயர்கள் வந்த காலத்தில் மேற்கில் இருந்து வந்தது சூபிசம். இந்துக்களின் பாடல் வழிபாட்டின் தாக்கத்தினால் உருவான சூபி இசை, பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பிரபலம். பொதுவாக சூபி இசைப் பாடல்கள். மதத்தை போதிப்பதாகவும், மனிதத்தை பரப்புவதாகவுமே இருக்கும் . சூபி கவிஞர்களான ரூமி, ஹபிஸ்,அமிர் குஸ்ரோவ் போன்றவர்களின் கவிதைகள் தான் இசையாக பாடப்பட்டன. ஒன்று, இரண்டு வாக்கியங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, உயிரின் அடியை தொட்டு வருடிவிட்டு செல்லும் பாடல்களாக இசைக்கப்படும் சூபி இசை, இப்பொழுது காலத்தின் மாற்றத்தினால் பல்வேறு வடிவங்கள் கொண்டு, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக பாடப் படுகிறது.

பொதுவாக சூபி இசை பித்த நிலையை Continue reading “தம்மு குட்டுக்கு… தம்மு குட்டுக்கு…”