இந்தியாவின் மகள் – சமூகத்திற்கு சொல்லும் செய்தி

கடந்த 2௦12 தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தின் ஆவணப்படம் தான் இந்தியாவின் மகள் (India’s Daughter). இப்படம் இந்தியாவின் கலாச்சாரம் எனக் கட்டமைக்கப் பட்ட ஆணாதிக்கச் சமூகத்தையும், சமநிலையற்ற இந்தியாவின் வளர்ச்சியையும் விவாதத்திற்குள் எடுத்துச் செல்கிறது. இன்றைய அரசாங்கம் இது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என படத்திற்கு தடை விதித்திருக்கிறது. அத்தடைகளையும் மீறி பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு,

இணையம் முழுவது பரவிக் கிடக்கிறது அதன் ஒளிப்பதிவு.

udwin-story_650_030515034330

‘இந்தியாவில் பெண்கள் என்றால் யார்? அவர்களின் நிலை என்ன?’ – இதுவே இப்படத்தின் இறுதியில் நம் முன் வைக்கப்படும் மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேளிவிகளுக்கான மட்டமான பதில்கள் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நம் முகத்தில் அறைந்து விட்டுக் கடக்கிறது. “ஏன் அந்தப் பெண் இரவு 8 மணிக்கு மேல் தனியாக ஒரு ஆணுடன் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அவளுக்குத் தண்டனை கொடுத்தோம்.” அந்த ஐந்து குற்றவாளிகளில் ஒருவன் கூறிய பதில். “நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களை தெரியாத ஆண்களுடன் மாலை 6.30 / 7.30 / 8.30 மணிக்கு மேல் வெளியில் விடுவதே இல்லை. இந்தியாவில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை கட்டி வைத்திருக்கிறோம். அதில் பெண்களுக்கான இடமே இல்லை.” குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர் சர்மா கூறியது. “ என் தங்கையோ, மகளோ இது போல் திருமணத்திற்கு முன் இருந்தால், குடும்பத்தினர் முன்னிலையில் தீ வைத்து எரித்து விடுவேன்” மற்றொரு வழக்கறிஞர் AP சிங் கூறியது.

இது நம் நாட்டின் பெரும்பாலான மக்களின் கருத்தும் என்பது தான் அதிர்ச்சி. இத்தனை ஆண்டுகளாக மிகச்சிறந்த கலாச்சாரம் என்ற போர்வைக்குள் இப்படியான ஆணாதிக்கச் சிந்தனைகளை மட்டுமே வளர்த்து இருக்கிறோம். எந்த வித சுதந்திர உணர்வும் இல்லாமல் பெண்கள் வளர்க்கப் படுகிறார்கள். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவைத் தவிர மற்ற இடங்களில் காணப்படுகிறது. “அந்தப் பெண் இரவில் அப்பவோ, மாமாவோ, அண்ணனோ யாருடைய துணையுடன் தான் வந்திருக்க வேண்டும்.” அன்று இரவு அந்த ஐந்து பேரும் கடும் போதை நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடன் யார் இருந்தாலும் இந்த நிலைமையே ஏற்பட்டிருக்கக் கூடும். யாரையும் சார்ந்து தான் பெண்கள் இருக்க வேண்டுமா? தனியாக இருந்தால் அவளின் நிலை இது தானா? இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். இது தான் நம் நாட்டில் பெண்களின் நிலை. இதெற்கெல்லாம் நம் பழமையான கற்பிதங்களே காரணம். ஆண்கள் அழுவது கூடாது, பெண்கள் சத்தமாக சிரித்தல் கூடாது போன்ற கற்பிதங்கள் ஆண்களை வலிமையானவர்களாகவும், பெண்களை நலிந்தவர்களாகவும் உருவாக்கியிருக்கிறது.

“பெண்கள் மென்மையானவர்கள். வைரத்தை போன்றவர்கள். நாம் தான் பாதுகாத்து வைக்க வேண்டும். வைரத்தை தெருவில் வைத்தால் நாய் தூக்கிக்கொண்டு தான் போகும்.” வழக்கறிஞர் சர்மாவின் கருத்து இதற்குச் சான்று. தூக்கிக்கொண்டு ஓடும் ஈன நாயின் தைரியத்தை வளர்த்ததும் நாம் தான். அடிப்படையாக ஆண் – பெண் இருவர் மீதான சமமான பார்வையே நம்மிடம் கிடையாது. இப்படியான சமூகத்திடம் இருந்து பெண்களின் உடைகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்ற கருத்து வருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உடைகள் தான் காரணம் என்றால் ஐந்து, ஆறு வயது சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கும் உடைகள் தான் காரணமா? இது காமம் மீதும், காதல் மீதும் சரியான புரிதல் இல்லாத சூழலில் வளர்ந்த மனப்பிறழ்வு கொண்ட மனிதனின் மனநிலை. ஒரு உடைதான் அவனின் செயலை தீர்மானம் செய்வது என்றால் அவன் எப்படியான வளர்ப்பில் இருந்து வந்திருக்கிறான் என்பது மிகப் பெரிய கேள்வி? பெரியார் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. “பெண் அலங்காரத்திற்கான பொருள் அல்ல. அவர்களுக்கு அழகு சாதனங்களை கொடுத்து தன்னை அழகாக காட்டும் வேலையை கொடுத்து விடாதீர்கள். அவர்கள் அதற்கானவர்கள் இல்லை.”

இந்தியாவின் மகள் ஆவணத்தின் மிக முக்கியமானதாக நான் பார்ப்பது குற்றவாளிகளின் சூழலை படம் பிடித்து காட்டியது தான். அந்த ஐந்து குற்றவாளிகளும் சேரியை சேர்ந்தவர்களும், வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தான். யாருக்கும் படிப்பறிவு இல்லை. படிக்கும் சூழ்நிலையிலும் அவர்கள் இல்லை. “பணக்காரர்கள் பணம் கொடுத்து பெண்களை அடைகிறார்கள். எங்களுக்கு துணிச்சல் இருக்கிறது. நாங்கள் அதன் மூலம் அடைகிறோம்” இதுவே அவர்கள் செய்த குற்றத்திற்கான மனநிலை என மனநல மருத்துவர் விளக்குகிறார். இது இந்தியாவின் சமநிலையற்ற வளர்ச்சியின் அடையாளம். இப்படியான மனப்போக்கு ஒட்டு மொத்த சமூகத்திற்குமே ஆபத்தானது. நாட்டின் வளர்ச்சி அடையாத பகுதிகளில் படிப்பறிவு இல்லை. அதன் காரணமாக வளர்ச்சி இல்லை. இது அவனை மேல் நோக்கி பார்க்க வைத்து பொறாமை கொள்ளச் செய்கிறது. ஒரு விதமான வன்மத்தை தூண்டுகிறது.இதன் அடிப்படையே மேல்சொன்ன மனப்போக்கிற்கு காரணமாக அமைகிறது. ஒரு முறை நிர்பயா வெளியில் சென்றிருந்த பொழுது, அவளது பையை ஒரு சிறுவன் திருடி விட்டான். அந்தச் சிறுவனை பிடித்து அடித்திருக்கிறார்கள். நிர்பயா அவர்களை தடுத்து, அவனை அழைத்து ஏன் இப்படிச் செய்தாய் என கேட்டிருக்கிறாள். “எனக்கும் உங்களைப் போல் உடை, செருப்பு, எல்லாம் போட வேண்டும் போல் இருக்கிறது. பர்கர் சாப்பிட ஆசையாக உள்ளது. அதனால் தான் திருடினேன்” என்று பதில் கூறியிருக்கிறான். இது தான் இன்றைய இந்தியாவின் நிலை – சமமாக வளர்ச்சி அடையாதது.

இவர்கள் ஐவரையும் தூக்கில் போடுவது தான் இதற்கான தீர்வா? இது ஒரு நிர்பயாவிற்கு நாம் கொடுக்கும் நீதியாக வேண்டுமானால் இருக்கலாம். இது போல் பாதிக்கப் பட்ட நிர்பயாகளுக்கும், நாளைய நிர்பயாகளுக்கும் நம்மால் என்ன செய்ய முடியும். படிப்பறிவு இதற்கான ஒரே தீர்வாக இருக்க முடியாது. மேலே குறிப்பிட்ட இரண்டு வழக்கறிஞர்களும் நன்கு படித்தவர்களே. அவர்களின் கருத்துக்கள் தான் பெரும்பாலான படித்தவர்களின் கருத்துக்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆண்கள், பெண்களுக்கான கற்பிதங்கள் உடைத்தெறியப் படவேண்டும். படிப்பறிவுடன் சமூக மாற்றமும் தேவை. கருத்து ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் அது நடக்க வேண்டும்.

வீடியோ பதிவை அரசு எல்லா தளங்களில் இருந்தும் அகற்றிவிட்டது. உங்களுக்காக எழுத்து வடிவில்…

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39391&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

டாரண்ட் (torrent) மூலமாக வீடியோவை பதிவிறக்கம் செய்ய :


India’s Daughter – The Nirbhaya Documentary (BBC)

https://kickass.to/the-nirbhaya-documentary-bbc-x264-t10305574.html

Advertisements

One thought on “இந்தியாவின் மகள் – சமூகத்திற்கு சொல்லும் செய்தி

  1. Well said…we shpuld be ashamed of such things happening in india…no one could stop this… Dont understand wh y parents not telling their child that respect woman…simply we r saying we have a gr8 culture..bullshit there is no culture if we dont respect or treat women 2well…sometimes I feel capital punishment is the best solution for such crimes like Arab countries…there us no place f9r such animals and criminals in this world…

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s