இந்தியாவும் பாகிஸ்தானும்… கோப்பையும் காஷ்மீரும்…

இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பை கிரிகெட் போட்டி. இதை இரு நாட்டிற்கும் இடையேயான மிகப் பெரிய போர் என்றதொரு நிலையை மக்கள் கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த இந்தியாவும் காலையிலே தொலைகாட்சி முன் அமர்ந்து விட்டது. சமூக வலைதளங்கள் முழுவதிலும் மக்களின் மன ஓட்டம் பிரதிபலித்தன. பெரும்பாலும் அது மட்டமானதாகவும், பிறழ்வு கொண்டதாகவும் இருந்தது. பாகிஸ்தானையும், அந்த நாட்டு மக்களையும் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். சமூக வலைதளத்தில் எங்கும் பாகிஸ்தானியர்கள் மிக மோசமாக  பகடி செய்யப்பட்டார்கள். சாலையில், போக்குவரத்து விதிகளைக் கூட மதிக்காமல் செல்கிற, அப்படியே எவனோ ஒருவன் மதித்து நின்றால் கூட ஹாரன் அடித்தே அவனை பைத்தியமாக்கும் சமூகத்திடம் இருந்து வேறு எதை எதிர் பார்க்க முடியும்.

கிரிகெட் என்பதை ஒரு  விளையாட்டாக பார்க்க விடாமல், பகை உணர்வுக்கான சூழலை ஏற்படுத்தியத்தில் ஊடகங்களுக்குத் தான் பெரும் பங்கு. இந்த வருட உலக கோப்பை ஒளிபரப்பை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் பெற்று இருக்கிறது. தன் வணிக ரீதியான வெற்றியை கருத்தில் கொண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ஒரு விளம்பர படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதற்கான லிங்க் https://www.youtube.com/watch?v=Za4qBpSQb9A . கொஞ்சம் கூட சமூகம் பற்றிய சிதனையோ, பார்வையோ இல்லாமல் தன் சுய லாபத்திற்காக இந்த பதிவை உருவாக்கியுள்ளது ஸ்டார் தொலைகாட்சி நிறுவனம். இதை மணிக்கு நூறு முறை, தன் அத்தனை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவும் செய்தது. இது வெறும் இரு நாட்டிற்கான போட்டி இல்லை, இரு நாட்டிற்கான போர் என்கிற ரீதியில் தான் விளம்பரப் படுத்தப்பட்டது.

10898132_1605632713007724_5586338599919088866_n

இதற்கெல்லாம் மேலாக , சமூக வலைதளங்களில் அன்றைய தினத்தில் பாகிஸ்தானை கேலி செய்த பதிவுகளே அதிகமாக இருக்கும். “கப்பும் எங்களுக்குத் தான், காஷ்மீரும் எங்களுக்குத் தான்… போ..போ.. “- இது முகநூல் பிரபலம் ஒருவரின் பதிவு. இங்கே பிரபலம் என்று குறிபிடுவது, நடிகர் நடிகையோ,  அரசியல் பிரமுகரோ, விளையாட்டு நட்ச்சத்திரமோ இல்லை. தங்களின் பதிவுகள் மூலம் சமூக தளங்களில் தங்களுக்கான ரசிகர்களை கொண்டு பிரபலம் அடைந்தவர்கள். இப்படியான முகநூல் பிரபலங்களை பார்க்கும் போதெல்லாம் கை, கால் உதறல் ஏற்பட்டு, குளிர் காச்சல் வருவது போன்ற பயம் ஏற்பட்டு விடுகிறது. நான் இதைப் பொதுமைப் படுத்த விரும்பவில்லை. போட்டியின் கோப்பைக்கும், காஷ்மீருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. மேலே குறிப்பிட்ட பதிவில் புலங்காகிதம் அடைந்து 1000 பேர் லைக் செய்து இருக்கிறார்கள். அன்று நடந்த போட்டிக்கும், உலக கோப்பைக்குமே சம்பந்தம் இல்லாத பொழுது, காஷ்மீரின் தொடர்பு எங்கு இருந்து வந்தது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், காஷ்மீர் நமதாகி விடுமா? இத்தனை ஆயிரம் பேர் பின்தொடரும் தன் பதிவை சமூக பிரக்ஞையோடு பதிவிடும் அடிப்படை அறிவுகூட இல்லை.

இந்தியா தவிர வேறு எங்கு தேடினாலும் இது தான் இந்திய வரைபடம். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் முழுவதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை.india map

இதற்கான விளக்கமாக சிறு வரலாற்றுக் குறிப்பை பதிவிடுகிறேன். 1947ஆம் ஆண்டு சுதந்திரம் தந்துவிட அங்கில அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, சிதறிக் கிடக்கும் பகுதிகளை இணைத்து முழுமையான இந்தியாவை உருவாக்கும் பணி தொடங்கியது. மூன்று முக்கிய பிரிவிவுகளாக இருந்தது  இந்தியா – 1) பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி; 2) இந்தியர்கள்(காங்கிரஸ் அமைப்பு )  ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்; 3) சமஸ்தானங்கள்.  முதல் இரண்டையும் இணைப்பதில் சிரமம் ஏதும் இல்லை. சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்ப்பதில் தான் சிக்கல். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தனி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஆர்வமாக இருந்தது. பெரும் சண்டையை தவிர்க்க, சமஸ்தானங்களுக்கு முன் மூன்று தீர்வை முன் நிறுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

– இந்தியாவுடன் சேர்ந்து கொள்ளலாம்

– பாகிஸ்தானுடன் சேர்ந்து கொள்ளலாம்

– யாரிடமும் சாராமல் தனித்து ஆட்சி புரியலாம்

காஷ்மீரில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஹரி சிங், மூன்றாவது தீர்வை முன்னிலைப் படித்தினார். யார் என்ன சொன்னாலும் முடிவை மாற்றுவதாக இல்லை. காஷ்மீரை விடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தாநிற்கும்  ஐந்தே வாரங்களில் எல்லைக் கோட்டை நிர்ணயித்தது பிரிட்டிஷ் அரசு. இந்தியாவும் , பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையிலும், காஷ்மீரில் தனி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான், காஷ்மீர் தங்களுக்கான பகுதியாக கருதி அதை ஆக்கிரமிக்க படைகளை அனுப்பிய போது, காஷ்மீர் சூறையாடப் பட தொடங்கி இருந்து. ஹரி சிங்கிற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இந்தியாவிடம் உதவிக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நேரு, காஷ்மீரை தங்களுடன் சேர்த்தால் தான் உதவி செய்ய முடியும் என காஷ்மீரை இந்தியாவுடம் இணைத்துக்கொண்டார். காஷ்மீரை இந்தியாவுடனான இணைப்பிற்கு மட்டுமே ஹரி சிங் ஒப்புக்கொண்டார். காஷ்மீருக்கான சட்டங்கள் வேறு. இந்தியாவில் போடப்படும் சட்டங்கள் முழுமையாக காஷ்மீரில் செல்லுபடி ஆகாது. அது தான் Article 370.

இந்தியா, தன்னுடன் காஷ்மீரை இணைத்துக் கொண்டு பாகிஸ்தான் படைகளை  விரட்டியது. காஷ்மீரின் ஒரு பகுதி வரை பாகிஸ்தானிய படை ஒடுக்கப் பட்டது. அதற்குள், குளிர் காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் , இரு நாடுகளும் குளிர் காலம் முடிவடைய தயாராக இருந்து. இதற்கிடையில், இந்தப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றது இந்தியா. மக்களின் வாக்குகள் மூலம் தீர்வு காண இரு நாடுகளுமே ஒப்புக் கொள்ளவில்லை. இரு தரப்பினரையும் அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலையே நிறுத்தி விட்டது. அதுதான் Pakistan Occupied Kashmir – POK எனவும், Indian kashmir எனவும் தற்பொழுது வரைஇருந்துவருகிறது.mpindinter

இரு நாடுகளும் பல ஆண்டு காலமாக எந்த ஒரு முடிவுக்கும் வர இலாத நிலையில் இருக்கிறது. இந்த உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை வெற்றி பெற்று காஷ்மீரையே நாம் பெற்று விடலாம் என்கிற பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன.  இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நம் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு மட்டும் வருடம் பல நூறு கோடிகளை செலவிடுகிறோம். இது வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் தொகை. இதற்கான சுமூகமான தீர்வை கண்டால், இதற்காக செலவிடும் தொகையை வளர்ச்சிக்காக செலவிடலாம். ஸ்டார் தொலைகாட்சி போன்றவர்களின் வணிக ரீதியான செயல் பாடு, நாடு முழுவது பாகிஸ்தானியர்கள் மீதான வெறுப்பையும், பாகிஸ்தானில் இந்தியர்கள் மீதான வெறுப்பையும் உண்டாக்குகிறது. அடுத்த தலைமுறையும் கூட இந்த பிரச்சனைக்காக தீர்வை காண முடியாத திசையை நோக்கி இட்டுச் செல்கிறது.

கிரிக்கெட் என்பதே ஒரு வணிக ரீதியான விளையாட்டாக மாற்றம் கொண்டுவிட்டது என்கிற கருத்திற்கெல்லாம் அப்பால் நாம் நம் நாட்டிற்காக குரல் கொடுக்கலாம், துணை நிற்கலாம், வெற்றியை கொண்டாடலாம். அடுத்த நாட்டை கேலி செய்யவோ, அவர்களில் நம்பிக்கையை பகடி செய்வதோ எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s