தம்மு குட்டுக்கு… தம்மு குட்டுக்கு…

Everytime I think of you God, my heart flutters


இது மேலே இருக்கும் தலைப்பின் பொருள். ‘அலிப் அல்லா ‘ என்ற சூபி பாடலில் வரும் வரிகள் இவை. சூபிசம் (sufism) என்னும் இஸ்லாமின்  மத வழிபாட்டின் தழுவலாக வந்தவை தான் இந்த சூபி இசை. இஸ்லாமில் இசை வழிபாடு என்பது கிடையாது தான். இந்தியாவில் முகலாயர்கள் வந்த காலத்தில் மேற்கில் இருந்து வந்தது சூபிசம். இந்துக்களின் பாடல் வழிபாட்டின் தாக்கத்தினால் உருவான சூபி இசை, பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பிரபலம். பொதுவாக சூபி இசைப் பாடல்கள். மதத்தை போதிப்பதாகவும், மனிதத்தை பரப்புவதாகவுமே இருக்கும் . சூபி கவிஞர்களான ரூமி, ஹபிஸ்,அமிர் குஸ்ரோவ் போன்றவர்களின் கவிதைகள் தான் இசையாக பாடப்பட்டன. ஒன்று, இரண்டு வாக்கியங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, உயிரின் அடியை தொட்டு வருடிவிட்டு செல்லும் பாடல்களாக இசைக்கப்படும் சூபி இசை, இப்பொழுது காலத்தின் மாற்றத்தினால் பல்வேறு வடிவங்கள் கொண்டு, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக பாடப் படுகிறது.

பொதுவாக சூபி இசை பித்த நிலையை அடையும் பாடல்களாகவே இருக்கும். உயிரின் ஊடே ஊடுருவும் இசை அவை. மேலே குறிப்பிட்டுள்ள ‘அலிப் அல்லா’ என்னும் பாடலை கேட்டால் உங்களுக்கும் புரியும். நான் சொல்வது எத்தனை உண்மை என்பது. இந்தப் பாடலை பாடியது ஆர்ப் லோகர் (Arif Lohar) என்பவர். (ஒரு சாயலில், நம்ம விஜய் டிவியில் வரும் பழனி பட்டாளம் போல் இருப்பார்.) ஒரு முறை கோவாவில், ஒரு நிகழ்ச்சியில், இவரை 6 -7 மணி நேரம் எல்லாம் பாட வைத்து கேட்டிருக்கிறார்கள்.  கீழ் உள்ள படத்தை க்ளிக் செய்தால், அவர் பாடலை கேட்கலாம்.

Untitled

ரஹ்மான் இசை அமைத்த ஜோதா அக்பர் படத்தில் வரும் ‘க்வாஜா மேரா க்வாஜா’ பாடல் சூபி வகையை சேர்ந்தது தான். அதே போல் டெல்லி 6 படத்தில் வரும் ‘மோலா மேரே மோலா’ என்ற பாடலும் சூபி பாடல் தான். திரைப்படத்தில் வருவதனால் வர்த்தக ரீதியான பாடலுக்கு இணையாக கொடுக்க சில சமரசங்கள் செய்யப் பட்டுள்ளன. உண்மையான சூபி இசையின் உணர்வை அவை தருவது இல்லை. டெல்லி 6 படத்தின் பாடலை, டிவி நிகழ்ச்சியில் இரு சிறுவர்கள் பாடும் வீடியோவின் லிங்க் கீழே உள்ளது. படத்தின் பாடலையும், இதையும் கேட்கவும். இத்தனைக்கும் இவர்கள் ஒரே ஒரு ஹார்மோனியபெட்டி மட்டுமே வைத்துப் படுவார்கள். அது தான் உண்மையான பித்த நிலையை உணர்த்துவதாக இருக்கும்.

sufi

1:2௦இல் இருந்து கேட்கவும். இது நமது ஊர் சூப்பர் சிங்கர் மாதிரியான ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் வளர்ச்சிக்காக பாடகர்களை அழ வைப்பது, அவர்கள் வீட்டை குப்பை செய்து அதை படம் பிடிப்பது போன்ற இடம் பெரும். அதனால், 1:2௦ இல் இருந்து கேட்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s